ஒரு மாத மற்றும் மூன்று மாத பயிற்சி – 1 மார்ச்

By   15/02/2019

வானகத்தில் ஒரு மாத மற்றும் மூன்று மாத இயற்கை வழி வேளாண் மற்றும் இயற்கை வாழ்வியல் பயிற்சி

விவசாயம் செய்ய இயலாது என்று மக்களால் புறக்கணிப்பட்ட நிலத்தில் வாழவும், உணவு உற்பத்தி செய்யவும் இயலும் என்பதை நேரில் கண்டு நம்பிக்கை பெறவும், கற்றுக்கொள்ளவும்,பயிற்சி பெறவும் வாய்ப்பாக.

இயற்கை வழி வேளாண்மை மற்றும் இயற்கையோடு இயைந்தவாழ்வை தற்சார்புடன் வாழ்ந்து கற்றுக்கொள்ள.

இந்த ஒரு மாத,மூன்று மாத பயிற்சியில்
விதைத்தல் தொடங்கி அறுவடை வரை.

அனைத்து செயல்பாடுகளையும் செயல் வழி கற்றல் என்ற பாணியில் நிகழும்.

உள்ளதை பகிர்ந்து கொள்ளல் என்பது அடிப்படை பண்பு, அது உணவில் தொடங்கி பொது வேலைகள், கால்நடை பராமரிப்பு, பண்ணை வேலை என அனைத்திலும் அனைவரது பங்களிப்போடும் பகிர்தலோடும் நடைபெறும். குறைந்த பட்சம் 5 மணி நேரம் உடல் உழைப்பு அவசியம்.

கற்போர் கற்பிப்போர் எனும் நிலை கடந்து கூடி கற்றலுக்காக வானகம் ஏற்படுத்தியுள்ள வாய்ப்பை பயன்படுத்த அழைக்கிறோம்.

இந்த செயல்பாடுகளில் இணைத்துக் கொள்ள விருப்பமுள்ளவர்கள் வானகத்துடன் ஒன்றிணையலாம்.

இப்பயிற்சியில் கால்நடை வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, பூச்சிகள் நமது நண்பன், நிரந்தர வேளாண்மை, தோட்டக் கலை, உள்ளூர் பொருளாதாரம், சுவரில்லாக் கல்வி, மரபு வழி மருத்துவத்துவம் பற்றிய அறிமுகம். இன்னும் பல சிறப்பு வகுப்புகளும் இடம்பெறும்.

ஒரு மாத பயிற்சியில் 10 நபர்களும்
மூன்று மாத பயிற்சியில் 10 நபர்களும் மட்டுமே பங்குபெற வாய்ப்புள்ளது.

இப்பயிற்சியில் பங்கெடுக்க விருப்பமுள்ளோர் பிப்ரவரி 27 ம் தேதி வானகம் வந்து சேரவேண்டும். இந்த பயிற்சி மார்ச் 1ம் தேதி தொடங்கும்.

பயிற்சி பங்களிப்பு விவரம்: ஒரு மாத
பயிற்சி நன்கொடை : ௹5000/-
மூன்று மாத பயிற்சி நன்கொடை.௹8000/.

நன்கொடை செலுத்த வேண்டிய விவரங்கள்
வங்கி கணக்கு விவரங்கள்
Nammalvar Ecological Foundation
A/C No: 137101000008277
IFSC Code : IOBA0001371
Bank Name : Indian Overseas Bank,
Branch Name : Kadavoor Branch, Karur (Dt) , TamilNadu.
⇒ (வங்கியில் செலுத்திய பணம் திருப்பித்தர இயலாது)
⇒ முன்பதிவு அவசியம். தொலைபேசி வாயிலாக முன்பதிவை உறுதி செய்யவும்.

1 மார்ச் 2019 தொடங்கும் ஒருமாத பயிற்சி வரும் 6 ஏப்ரல் 2019 அன்று ஐயா நம்மாழ்வாரின் பிறந்தநாள் நிகழ்ச்சியோடு நிறைவடையும்.

அடையாள அட்டை மற்றும் புகைப்படம் அவசியம் கொண்டு வரவும்.

விருப்பமுள்ள நண்பர்கள் தொடர்பு கொண்டு தங்கள் வருகையை உறுதி செய்யவும்.


தொடர்புக்கு :
+918489750624
+916379453595