ஒருநாள் நலவாழ்வு பயிற்சி – 24 பிப்ரவரி

By   15/02/2019

ஒருநாள் நலவாழ்வு பயிற்சி

நோய்க்கு இடங்கொடேல் என்று ஔவையார் சொன்னது போல நோயற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வேண்டுமானால் அக மற்றும் புறக்காரணிகளால் உருவாகும் நோய்க்கூறுகள் நம்மை பாதிக்காமல் ஒரு அரணோடு வாழவேண்டியது தற்காலத்தில் அவசியமும் கட்டாயமுமாக மாறி வருகிறது.

உடலோ மனமோ அல்லது இரண்டுமோ நோயுற்று, இந்த வாழ்வின் மீது பெரும் வெறுப்பையும் சலிப்பையும் சுமந்து கொண்டிருக்கும் மக்களை அனுதினமும் சந்திக்கிறோம்.

நோய்களுக்கான சிக்கிச்சைகள் பல்வேறு மருத்துவமுறைகள் நாடெங்கிலும் விரவிக் கிடந்தாலும், நோய் அனுகாமல் வருமுன் காத்து ஆரோக்கியமாக நிறைவான வாழ்வு குறித்தான தற்காப்பை சுயஆற்றலை எங்கு இழந்தோம் என்கிற கேள்விகளுக்கு விடையாகத் தான் வானகத்தின் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறோம்.

அதில் ஒன்று தான் நலவாழ்வு குறித்தான பயிற்சியும் கலந்துரையாடலும், நஞ்சில்லா உணவுக்கான வேலைகள் தொடங்கி தவழ்ந்து, நடந்து, தற்போது வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறோம்,

ஏனெனில் நம்முன்னே இருக்கும் சவால் அப்படி, அதே போல ஆரோக்கியம் சார்ந்தும் ஓட வேண்டிய கட்டாயத்தை தற்காலச் சூழல் மனிதனை உந்தித் தள்ளுகிறது.

இந்த நலவாழ்வு பயிற்சியில் உணவு மற்றும் யோக முறைகளை கொண்டு நோய் உருவாகும் காரணிகளை நம்மை அண்டவிடாமல் காத்துக் கொள்ளும் ஒரு தற்காப்பு கலையை தான் நமக்கு கைமாற்றிக் கொடுக்கவிருக்கிறார் திரு.வேதா அவர்கள்.

குறிப்பாக பழ உணவுகளை கொண்டு உடலில் தேங்கிக் கிடக்கும் கழிவுகளை வெளியேற்றி, உடலில் உள்ள கூறுகளை சமன் செய்து ஆரோக்கிய வாழ்வு நோக்கிய பயணத்தின் தொடக்கமாக இந்த நலவாழ்வு பயிற்சி அமையும்.

வேதா அவர்கள் சென்னை சாலிகிராமத்தில் ஆரா யோகா சிகிச்சை மையத்தை நடத்தி வருகிறார், எண்ணற்ற மக்களின் ஆரோக்கிய வாழ்வுக்கு வழிகாட்டியாக திகழ்ந்து வருகிறார். அவர் முழுநாள் நம்மோடு இருந்து தான் கற்றதையும், கடைபிடிப்பதையும், மக்களுக்கு வழங்கி வரும் அறிவையும் பகிர்ந்து கொள்ள இருக்கிறார்.

எவ்வாறு வானகத்தில் நஞ்சில்லா உணவுக்காக தொடர் முயற்சிகளை இணைந்து கையில் எடுத்திருக்கிறோமோ அதுபோல, நல வாழ்வுக்காவும் அதே ஊக்கத்தோடு அனைவரும் கூடி இயங்குவோம்.

வானகம் அனைவரையும் அன்போடு அழைக்கிறது.

பயிற்சி நாள் : 24.02.2019
நேரம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை
இடம் : வானகம், நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம்.
சுருமான்பட்டி, கடவூர், கரூர் மாவட்டம்.
பயிற்சி பங்களிப்பு – ₹500 மட்டும்.

முன் பதிவு
தொடர்பு எண் : +919445879292