Monthly Archives: December 2018

நம்மாழ்வாரின் நினைவு நாள் நிகழ்வு – 2019

நம்மாழ்வாரின் நெஞ்சுக்கு நெருக்கமான அனைவருக்கும் வணக்கம். நம்மாழ்வாரின் நினைவு நாள் நிகழ்வை ஜனவரி 1 அன்று எப்போதும் போல சிறப்பாக நடத்த முடிவு செய்திருந்தோம். ஆனால் கஜா புயலின் தாக்கத்தால் 8 மாவட்டங்களில் பெரும் இழப்பை அனைத்துத் தரப்பும் மக்களுக்கும் ஏற்படுத்தியுள்ளது அனைவரும் அறிந்ததே. பாதிக்கப்பட்ட பெருவாரியான மக்களின் துயரத்தில் பங்கேற்கும் வகையில் நம்மாழ்வாரின் நினைவு நாளைக் கலைநிகழ்ச்சிகள், சிறப்பு விருந்தினர்கள் வருகை இன்றி பெரிய நிகழ்வாக நடத்தாமல் எளிய நினைவஞ்சலியாகக் காலை 10 மணி வரை… Continue reading »

மரபு விதை காப்பாளர் திரு. நெல் ஜெயராமன் மறைவு

கடந்த இரண்டு ஆண்டுகளாகக் கடுமையான நோயோடு போராடிய நம் ஜெயராமன் இன்று நம்மிடமில்லை. பெட்காட் ஜெயராமன் ஆக, நுகர்வோர் அமைப்பின் கள செயற்பாட்டாளராக, கட்டி மேடு என்ற அடையாளம் தெரியாத குக்கிராமத்தில் இயங்கியவர் ஜெயராமன். நம்மாழ்வார், “ஈரோடு மாவட்டத்திற்கு இனி நான் தேவையில்லை” என்று தஞ்சையில் இயங்கத் தொடங்கிய போது நம்மாழ்வாரால் ஈர்க்கப்பட்டார். நுகர்வோர் உரிமைகளில் நஞ்சில்லாத உணவு முக்கியமில்லையா என்ற கேள்வியின் ஆழம் புரிந்த ஜெயராமன் நம்மாழ்வாரோடு கை கோர்த்தார். பாரம்பரிய விதைகளின் தேவை, பாதுகாப்பது,… Continue reading »