Vanagam – Gaja Cyclone Damage Photos

By   24/11/2018

வானக நண்பர்களுக்கு வணக்கம்.

தமிழகத்தைத் தாக்கிய கஜா புயல், வானகத்திலும் (16.11.2018) பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

புயல் காற்றின் வேகத்தால், மாட்டுக் கொட்டகை தரை மட்டமாக முற்றிலும் சேதப்பட்டுள்ளது.

மின்சாரத் தேவையை பூர்த்தி செய்து வந்த சோலார் மின் அமைப்பும் சுக்குநூறாக உடைந்து விட்டது.

பயிற்சிக் குடிலும், நம்மாழ்வார் ஐயாவின் குடிலும் பலவீனமடைந்து விட்டது.

நமது உழைப்பாலும், இயற்கையின் துணையாலும் நின்று இருந்த பல மரங்கள் வேரோடு சாய்ந்து விட்டது.

இதுவும் இயற்கையின் நியதி தான், இதையும் நாம் கடந்து செல்ல வேண்டும் என்ற புரிதலுடன் தான் நாம் பயணித்துக்கொண்டு இருக்கிறோம்.

நன்றி.