1 Day Natural Medicine Camp on 12-10-18

By   08/10/2018

வானகத்தில் ஒரு நாள் இயற்கை மருத்துவ முகாம்

(முன்பதிவு அவசியம்)
நாள் : 12-10-2018 வெள்ளிக்கிழமை
நிகழ்விடம் : வானகம், கடவூர், கரூர்
நன்கொடை : ₹500/-
முன்பதிவுக்கு : 88258 10072

ஐயா நம்மாழ்வார் அவர்கள் நீண்ட காலமாக சொல்லி வந்தது “யாரெல்லாம் உடலாலும், மனதாலும் பாதிக்கப்பட்டு இருக்காங்களோ அவங்கல்லாம் இங்கே வந்து தங்கி நல்ல காற்றையும், நீரையும், உணவையும் உட்கொண்டு குணமாகிப் போகனும்ய்யா” என்றார்.

வானகத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றான நம்முடைய மரபு வழி மருத்துவங்கள் மக்களை சென்று சேரச் செய்வதாகும். அதன் துவக்கமாக, இயற்கை மருத்துவத்தை விழிப்புணர்வாகவும், பயிற்சியாகவும், மருத்துவமாகவும் வானகம் ஒருங்கிணைத்து எடுத்து நடத்திட உள்ளது.

அதன் முதல் கட்டமாக ஐயா நம்மாழ்வாரின் நண்பரும் இயற்கை மருத்துவருமான மருதமலை R.சுப்பிரமணியன் அவர்கள் இயற்கை மருத்துவ பயிற்சியையும், சிகிச்சையும் அளிக்க உள்ளார்.

குறிப்புகள்:
⇒ பயிற்சி காலை 9 க்கு துவங்கி மாலை 4 மணிக்கு நிறைவு பெறும்.
⇒ காலை உணவு உண்ணாமல் வரவேண்டும். வானகத்தில் இயற்கை உணவு வழங்கப்படும்.
⇒ பயிற்சியில் கலந்து கொள்வோர் தனது பங்களிப்பாக ரூ.500/- க்கு குறையாமல் நன்கொடையாக வழங்கினால் பேருதவியாக இருக்கும்.

நன்கொடை செலுத்த வேண்டிய விவரங்கள்
Nammalvar Ecological Foundation
A/C No: 137101000008277
IFSC Code : IOBA0001371
Bank Name : Indian Overseas Bank
Branch Name : Kadavur Branch, Karur (Dt) , TamilNadu
⇒ (வங்கியில் செலுத்திய பணம் திருப்பித்தர இயலாது)
⇒ முன்பதிவு அவசியம். தொலைபேசி வாயிலாக முன்பதிவை உறுதி செய்யவும் .