7 Day Children Program from 21st to 27th May 2018

By   26/04/2018

Vanagam is conducting a 7 Day Children Program from 21st to 27th May 2018.

வானகத்தில் குழந்தைகள் கொண்டாட்டம்

2018 மே 21 திங்கள் முதல் 27 ஞாயிறு வரை

குழந்தைகளுக்கு கடந்த காலத்தை குறித்தோ, எதிர்காலத்தை குறித்தோ எந்த கவலையுமில்லை,
வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும், அவர்களுக்கான உலகத்தில் மிகவும் மகிழ்ச்சியான மனநிலையிலேயே வாழ்கின்றனர்.

நிகழ்காலத்தில் வாழ்பவன் படைப்பாற்றல் நிறைந்தவனாக இருக்கிறான், ஒவ்வொரு நிமிடத்தையும் விழிப்போடு கவனித்து வாழ்கிறான், தான் எடுக்கும் முடிவில் உறுதியான மனத்துடன் பயணிக்கிறான்.

சமூகத்தோடு சேர்ந்து இயங்கும் போது சமரசம் செய்யத் துவங்குகிறோம், அங்கிருந்து தான் நம் பாதையில் சிறிது சிறிதாக மாற்றம் ஏற்படுகிறது, சுமைகள் கூடிக் கொண்டே போகிறது, நம் வாழ்க்கைக்கு என்ன தேவை என்பதை முடிவெடுக்கும் இடத்திலிருந்து நாம் வெகு தூரம் விலகிச் சென்றுவிடுகிறோம். நீண்ட போராட்டத்திற்கு பிறகே நாம் வாழ்வை வாழ்ந்தோமா, கழித்தோமா எனும் சிந்தனை பிறக்கிறது, அப்போது தான் நம் சந்ததிகளுக்கு இந்தச் சுமையை, சமரசமான மேம்போக்கான வாழ்வை விட்டுச் செல்லாமல் இருக்க என்னவெல்லாம் தேவை எனத் தேடுகிறோம்.

நமது எண்ணங்கள் அறம் சார்ந்து வலுப்பெறும்பொழுது வாழ்வு பகிர்ந்தளிக்கும் குணமாக, மகிழ்ச்சி கொண்டதாக, கொண்டாட்டம் நிறைந்ததாக காட்சியளிக்கும்.

அறம் சார்ந்த தற்சார்பு வாழ்க்கை முறையின் கூறுகளை அவர்களின் மனத்துள் குழந்தை பருவத்திலேயே விதைத்து விட்டோமென்றால் அது வளர்ந்து மரமாக மாறும் பொழுது அனைவரது வாழ்வும் மகிழ்ச்சி நிறைந்ததாகவும், ஒருவருக்கொருவர் இணக்கமான சூழலோடு, பகிர்ந்து வாழும் மாண்பு கொண்ட உலகமாக சுயமாகவே உருப்பெற்றுவிடும்.

வானகம் அதற்கான சூழலை உருவாக்க காத்திருகிறது இணைந்து செயல்படுவது மட்டுமே நாம் செய்ய வேண்டியது.

பயிற்சி நடைபெறும் இடம்
***************************
வானகம்
நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம்
சுருமான்பட்டி
கடவூர், கரூர்

பயிற்சிக் கட்டணம் : ரூ. 2500/-
( தங்குமிடம், உணவு உட்பட )
#8 வயது முதல் 14 வயது குழந்தைகள் மட்டும்
பெற்றோர்கள் உடன் தங்க அனுமதி இல்லை, பயிற்சி முழுவதும் தங்கி தன்னார்வலர்களாக இணைந்து கொள்ள சிலர் மட்டும் இணைந்து செயல்படலாம்.

20-05-2018 ஞாயிறு மாலை 6 மணிக்குள் குழந்தைகளை அழைத்து வரவும்.

முன்பதிவு :

9884708756 | 9944236236

>நன்கொடை செலுத்த வேண்டிய விவரங்கள் :

வங்கி கணக்கு எண் :

Nammalvar Ecological Foundation A/C No: 137101000008277
IFSC Code : IOBA0001371
Bank Name : Indian Overseas Bank,
Branch Name : Kadavoor branch, karur district , tamilnadu .

குறிப்பு :
1. வெளியிலிருந்து கொண்டுவரும்
⇛ உணவு பொருட்கள் அனுமதிக்கப்படாது
⇛ பாலித்தின் பைகள்
⇛ சோப்பு
⇛ ஷாம்பு
⇛ பேஸ்ட்
⇛ கொசுவர்த்தி
போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயணங்கள் பயன்படுத்த அனுமதி கிடையாது. அதற்குப் பதிலாக பண்ணையில் கிடைக்கும் இயற்கை பொருள்களை எப்படி பயன்படுத்துவது என்பதுபற்றி கற்றுக் கொடுக்கப்படும்.
2. பயிற்சியின் இடையே வெளியில் செல்லவோ , வெளியில் தங்கவோ அனுமதியில்லை .
3. களப் பயிற்சிக்கு தேவையான உடை மற்றும் போர்வை , கைவிளக்கு (torch) எடுத்து வரவும்.
4. பயிற்சியின் இறுதியில் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்